ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி சயனபுரம் காலனி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகர் என்பரின் மகளை மேல் வெங்கடாபுரம் சுந்தரமூர்த்தியின் மகன் சேதுபதி ஒரு காதலாக அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார் 

இந்நிலையில் நேற்று முன்தினம் சேதுபதியும் இவரது நண்பருமான சயனபுரம் காலனி பகுதியை சேர்ந்த பெரியசாமியின் மகன் ஆகாஷ் ஆகிய இருவரும் அந்தப் பெண்ணின் வீட்டின் அருகே சென்று பெண்ணின் அப்பாவிடம் மற்றும் அவரது அம்மாவிடம் உங்கள் மகளை நான் காதலிக்கிறேன் உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று கூறியுள்ளார்

பிறகு பெண்ணின் பெற்றோர்கள் அவர் கூறியதற்கு மறுப்பு தெரிவித்ததால் அந்த வாலிபர் அவர்களிடம் கத்தியைக் காட்டி நீங்கள் உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து வைக்காவிட்டால் உங்களை ஒழித்து விடுவேன் என்று ஆபாசமாக பேசியும் நீங்கள் எங்காவது வெளியே செல்லும் போது உங்களை ஒழித்துக் கட்டி விடுவேன் என்று அதிகாரபூர்வமாக மிரட்டல் விடுத்தார்

இதுதொடர்பாக பெண்ணின் பெற்றோர்கள் நெமிலி காவல் நிலையத்துக்குச் சென்று தங்கள் வீட்டின் அருகே கத்தியைக் காட்டி மிரட்டிய வாலிபர்கள் மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார் அதன்பேரில் போலீசார் இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்