பல சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றக்கூடிய நாம், மாவிலை வீட்டு வாசலில் தோரணமாகவும், பூஜைகளின் போதும் பயன்படுத்தப்படுகிறது. அப்படி ஏன் மாவிலை விஷேசங்களில் பயன்படுத்தப்படுகிறது என்பதை விரிவாக பார்ப்போம்.

நம் வாழ்நாளில் பல விழாக்கள், பண்டிகை, வீட்டு விஷேசங்களைப் பார்த்திருப்போம். வீட்டு விஷேசங்களின் போது பின்பற்றப்படக்கூடிய சடங்குகளை நாமும் செய்திருப்போம். 

அந்த சடங்கு, சம்பிரதாயங்கள் நாம் இன்றும் ஏன் செய்கிறோம் என்று கூட அறிந்து கொள்ளாமல் பின்பற்றி வந்திருப்போம். அதில் ஒன்று தான் விஷேசங்களின் போது மாவிலை கட்டுவது என்ற செயல்.

ஏன் மா இலைகள்

வேம்பு, அரசமரம் ஆகியவற்றுக்கும் ஆன்மீகத்துக்கும் நிறைய தொடர்புகள் இருந்தாலும் கூட முக்கிய நாட்களில் வீட்டின் வாயிலில் நாம் குறிப்பாக மா மரத்தின் இலைகளைத் தோரணமாகக் கட்டுவதற்கான காரணம் என்ன என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா? இல்லவே இல்லை. அது ஏனென்றால் இந்து மதத்தைப் பொருத்தவரையில் மா மரம் என்பது புனிதமான மரமாகக் கருதப்படுகிறது.

கலசங்கள்

நீங்கள் நன்கு கவனித்தால் தெரியும். கோவில்களிலோ வீட்டிலோ பூஜையின் போது கலசங்களில் சுற்றுலும் 5 மா இலைகளைச் சொருகி வைப்பார்கள். அதில் மஞ்சள் மற்றும் குங்குமத்தைத் தெளிப்பார்கள். இந்து மதத்தில் இது மிக முக்கிய சடங்காகப் பார்க்கப்படுகிறது.

கடவுள் அவதாரங்கள்

மாம்பழமும், மரமும் இலைகளும் பல கடவுள்களின் அவதாரங்களோடு இந்து மதத்தில் தொடர்பு படுத்தப்படுத்தப்படுகிறது. மாவிலைத் தோரணங்கள் கட்டுவது என்பது பார்வதி, சிவபெருமானின் பிள்ளைகளாகிய பிள்ளையார் மற்றும் முருகப் பெருமானை சுட்டிக் காட்டும் குறியீடு ஆகும். இவர்கள் இருவரும் இந்த மாமரம் தரும் கனிக்காகத் தான் சுற்றித் திரிந்தனர்.

மரபு

காலங்காலமாக நம்முடைய முன்னோர்கள் இதை செய்து வருவதால் நாமும் ஏன் எதற்கு என்று காரணத்தைக் கேட்காமலேயே பின்பற்றத் தொடங்கிவிட்டோம். நம்மில் யாருமே ஏன் வீட்டு வாசலிலி மாவிலை தோரணம் கட்டகிறோம் என்பதற்குப் பின்னால் இருக்கும் காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கவு இல்லை. ஆம். இதில் ஆன்மீக காரணங்களும் சடங்கு முறைகளும் இருக்கின்றன. அதேசமயம் அறிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது.

என்ன காரணம்?

மாவிலைகள் மிகவும் புனிதமான பொருளாக நம்பப்படுகிறது. அதேபோல் நம்முடைய வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியையும் வெளியேற்றிவிடும். வெளியிலிருந்து வீட்டுக்குள் விடாது என்ற நம்பிக்கையும் உண்டு. அதோடு இது பாசிடிவ் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிற ஆற்றல் கொண்டதால் தீமை விளைவிளைவிக்கும் பாக்டீரியாக்களில் இருந்து பாதுகாக்கிற ஆண்டி பாக்டீரியலாகப் பயன்படுகிறது.

சுப காரியங்களின் போது

சுப காரியங்களின் போது மட்டுமல்ல பொதுவாக எல்லா நாட்களிலுமு் கூட கட்டலாம். திருமண வீடுகளில் கட்டும்போது மணப்பெண், மணமகனுக்கும் அவர்களுக்குப் பின்னால் வரும் சந்ததியினருக்கும் இது ஆசியை வழங்கவல்லது. கடவுள் அந்த வீட்டைக் காத்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

தெற்காசிய நாடுகளில் மாவிலைகள், மா மரம் ஆகியவை மதங்களுக்கான குறியீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மாமரத்தின் கீழ் லிங்கம் இருப்பது போன்று குறியீடுகள் கூட உள்ளன. அதேபோல புத்த கலைகளில் பெரிதும் மாவிலை இருக்கும். புத்த மதத்தில் மா இலைக்கான குளியீடுகளும் அடையாளங்களும் நிறைய உண்டு.

ஸ்ரவஸ்தி கதை


புத்த கதைகளில் மா மரம் அறிவின் குறியீடாக காட்டப்படுகிறது. அதே போல் மாமரம், மா இலைகள் என்பவை மறு உற்பத்திக்கான அடையாளமாகவும் ஆண்மைத் தன்மைக்கான குறியீடாகவும் கருதப்படுகிறது.

இந்தியாவில் மகாலட்சுமியைக் குறிப்பதாக விளங்குகிறது. அது கெட்ட சக்திகளை விரட்டி நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

அறிவியல் காரணம்


வீட்டு முன் கட்டியிருக்கும் மாவிலைகளை நன்கு கவனித்துப் பாருங்கள். அது மற்ற இலைகளைப் போல சீக்கிரம் காய்ந்து போகாது. பசுமையை தன்னுள் அதிகமாக தக்க வைத்திருக்கும் ஒரு தாவரம். பொதுவாக நமக்கு நன்றாகத் தெரியும் ப்சசை தாவரங்கள் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சிக் கொண்டு ஆக்சிஜனை நமக்குக் கொடுக்கும் என்று. அதனால் தான் வாசலிலேயே அதை தோரணம் கட்டிவிடுகிறோம். அது கட்டப்படும் இடத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் வைத்திருக்கும்.

அதேபோல் பச்சை நிறம் நம்முடைய மனதை பிரஷ்ஷாகவும் இலகுவாகவும் வைத்திருக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும். இனியாவது நரியான காரணத்தை தெரிந்து கொண்டு வீட்டு வாசலில் மா இலை தோரணத்தைக் கட்டுங்கள்.

விஷேசங்களில் மாவிலை ஏன் கட்டுகிறோம் என்பதைப் பார்ப்போம்.

  • நம் வீட்டில் நடக்கக்கூடிய விழாக்கள், விஷேசங்களுக்கு நாம் அழைப்பு விடுத்ததன் பேரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வருவார்கள். வருபவர்களில் சிலருக்கு உடல் உபாதைகள் இருப்பினும் அவர்களை நாம் வரக்கூடாது என தடுக்க முடியாது. ஆனால் அப்படி வருபவர்களை தடுக்க முடியாவிட்டாலும், அவர்கள் வருவதால் ஏற்படக்கூடிய நோய் தொற்றுக்களைத் தடுக்க வேண்டியது விஷேசத்திற்கு அழைத்த நம்முடைய கடமையாகும்.
  • விழாக்களின் போது விருந்தினர்களின் எண்ணிக்கை அதிகமாக வருவார்கள். அதனால் காற்றில் அசுத்தம் அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக அங்கு வரக்கூடிய குழந்தைகளுக்கு சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தடுக்க இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் ‘மாவிலை’ தோரணம் ஆகும்.
  • விழாக்களில் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருட்களும் இறைவனின் அருள் தரக்கூடியதாக இருக்கிறது. அதில் மாவிலையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாக பூஜையின் போது கலசம் வைத்து பூஜையின் முடிவில் மாவிலை மூலம் கலச நீரை தெளிப்பது, கலச நீரை அருந்தவும் செய்வார்கள். இதனால் ஆரோக்கியம் மேம்படும். மாவிலை போடப்பட்ட கலச நீரில் பிராண வாயுவின் அளவு அதிகமாக இருக்கும்.
  • மாவிலை தோரணம் கட்டுவதால் வீட்டில் இருக்கும் வாஸ்து தொடர்பான பிரச்னைகள் கட்டுக்குள் வரும்.
  • அதே போல் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவதால் எதிர்மறை சக்திகள் வீட்டில் நுழைவதை தடுக்க முடியும்.
  • மாவிலை தோரணம் வீட்டில் இருக்கும் காற்றினை சுத்தம் செய்யக்கூடிய ஏர் ப்யூரிஃபயர் வேலையைப் பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுத்தக்கூடியதாக இருக்கிறது.
  • அதே போல மாவிலை தோரணம் கிருமிநாசினியாகச் செயல்படுகிறது. அதனால் மனிதர்கள் வெளியிடும் கரியமில வாயுவை உட்கிரகித்து, சுற்றுச்சூழலைச் சீர் செய்வதாக இருக்கிறது.
  • விழாக்களின் போது மாவிலை தோரணம் கட்டுவதால், விழாவுக்கு வரும் பக்தர்களின் எதிர்மறை எண்ணங்கள் நீக்கி புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருக்கும். காய்ந்த மாவிலையாக இருந்தாலும் அதன் சக்தி குறைவது இல்லை.
  • இப்படி பல்வேறு சக்திகளைக் கொண்ட, ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய மாவிலை தோரணம் கட்டுவதை விடுத்து, கடைகளில் கிடைக்கும் அலங்கார மாவிலை தோரணத்தை கட்டுவதால் என்ன பலன் கிடைக்கும்.
  • இனியாவது வீட்டு விஷேச நாட்களில் மாவிலை தோரணத்தை கட்டி அதன் பலனை பெற்றிடுவோம். நம் தலைமுறையினருக்கும் அதன் அவசியத்தை உணர்த்திடுவோம். இயற்கையோடு இணைந்து வாழ்ந்து ஆரோக்கியத்தைப் பெற்றிடுவோம்.