வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக நெமிலியில் 41 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வெப்பச்சலனத்தின் காரணமாக பரவலான மழை பெய்தது. நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு வரை ஒரு சில இடங்களில் மழை பதிவாகி உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 2.8, ஆற்காட்டில் 6, நெமிலியில் 41, வாலாஜாவில் 2.1, அம்மூரில் 18, சோளிங்கரில் 11.2, கலவையில் 17.2 மி.மீ மழை பதிவாகியுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் காட்பாடியில் 1, மேல் ஆலத்தூரில் 4.2, வேலூரில் 2.9, அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 5.6 மி.மீ மழை பதிவாகியுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூரில் 8.4, வடபுதுப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 40.8 மி.மீ மழை பதிவாகியுள்ளன.

தி.மலை மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி, மாவட்டத்தில் சராசரியாக 13.21 மி.மீ., மழை பெய்துள்ளது. இதில், அதிகபட்சமாக கலசப்பாக்கம் பகுதியில் 45, ஆரணி பகுதியில் 42, செய்யாறு பகுதியில் 30, வந்தவாசி பகுதியில் 22, ஜமுனாமரத்தூர் பகுதியில் 2, போளூர் பகுதியில் 16.4, கீழ்பென்னாத்தூர் பகுதியில் 1.2 மி.மீ., மழை பெய்துள்ளன.