வேலூர் மாவட்டம் காட்பாடி ஓட்டைப் பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு வேலூர் சாய்நாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரமாபாய் (50) அஞ்சல்துறையில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். 

இவர் தன் உறவினரின் திருமணத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்ல சாலையில் நடந்து சென்ற செல்லும்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திடீரென்று ரமாபாய் கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார்.

சுதாரித்த ரமாபாய் உடனே கூச்சலிட்ட உடன் மர்ம நபர் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றான். 


இதுகுறித்து ரமாபாய் அளித்த புகாரின் பெயரில் விருதம்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து. அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை தேடிவருகின்றனர்.