வேலூர் மாவட்டம் குடியாத்தம் அதிமுக நகர செயலாளர் ஜே. கே. என். பழனி மகள் டாக்டர் பி. ரேகா- டாக்டர் கே. ஆர். தீபக்அவினாஷ் ஆகியோருக்கு காஞ்சிபுரம் அடுத்த குன்றத்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் திருமணம் நடைபெற்றது.

பொதுமக்களிடையே ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருமணம் நடைபெற்ற புதுமண டாக்டர் தம்பதிகள் ரத்த தானம் அளிக்க குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

புதுமணத்தம்பதிகள் டாக்டர் பி. ரேகா- டாக்டர் கே. ஆர். தீபக்அவினாஷ் ஆகியோர் ரத்த தானம் வழங்கினார்கள். ரத்த தானம் வழங்கிய டாக்டர் தம்பதிகளுக்கு மருத்துவமனை சார்பில் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் ஜே. கே. என். பழனி, எம். கே. ராஜாபாதர், ஆர் பிரபாவதி, ரோட்டரி சங்க தலைவர் செ. கு வெங்கடேசன், செயலாளர் வி. மதியழகன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஆர். மூர்த்தி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏ. மேகராஜ், சி கண்ணன், எம். கோபிநாத் உள்பட பலர் உடன் இருந்தனர்.