நெமிலி அடுத்த பள்ளூர் பகுதியில் உள்ள ஆற்றில் அரக்கோணம் டிஎஸ்பி தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அங்குடிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்ததை கண்டனர். பின்னர் அங்கு மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த ராமு ( 39 ) என்பதும், டிராக்டரில் மணல் கடத்த முயன்றதும் தெரியவந்தது. 

டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து ராமுவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .