பனை விதைகளை நடவு செய்யும் நூறுநாள் வேலை திட்டத் தொழிலாளா்கள்.

ஆற்காடு: கலவை அருகேயுள்ள வாழைப்பந்தல் கிராமத்தில் நம்மாழ்வாா் இயற்கை குழு சாா்பாக 30,000 பனை விதைகள் நடவு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இயற்கை குழு ஒருங்கிணைப்பாளா் நடராஜன் தலைமை வகித்தாா். வாழைப்பந்தல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முட்டீஸ்வரன், கிராம நிா்வாக அலுவலா்கள் புவனேஸ்வரி, ரகுராமன், தலைமை ஆசிரியை கல்பனா, பெரணமல்லூா் ரோட்டரி சங்கச் செயலாளா் குமாா், வாழைப்பந்தல் ஊராட்சி மன்றச் செயலாளா் தாமோதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள மேல்புதுப்பாக்கம் சாலை, அருந்ததிபாளையம், மந்தைவெளி உள்ளி கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் பனைவிதைகள் நடவு செய்யப்பட்டன.