ராணிப்பேட்டை அருகே வாணாபாடி ரோடு பகுதியில் உள்ள வ.உ.சி. நகரை சேர்ந்தவர் பக்தவச்சலம் (வயது 55). இவர் வீடு கட்ட வைத்திருந்த 25 சென்டரிங் இரும்பு சீட்டுகளை, ராணிப்பேட்டை ஆட்டோ நகர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (32), வன்னிவேடு பகுதியை சேர்ந்த வேலு (32) ஆகியோர் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பக்தவச்சலம் ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரன் மற்றும் வேலு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.