கொடி அணிவகுப்பு பேரணி
காவல்துறையின் கொடி அணிவகுப்பு பேரணியை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்தியன் துவஙக்கி வைத்து அணிவகுப்பில் கலந்து கொண்டனர். மேலும் இதில் ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு ஆய்வாளர்கள் பார்த்தசாரதி காண்டீபன், வாசுகி மங்கையர்க்கரசி அன்புக்கரசி மற்றும் உதவி ஆய்வாளர்கள் ராணிப்பேட்டை ஆற்காடு வாலாஜா கலவை திமிரி ஆகிய காவல் நிலைய காவலர்கள் மற்றும் ஆயுதப்படை போலீசார் 110 காவலர்கள் பங்கேற்றனர்.
இந்த அணிவகுப்பு முத்துக்கடை பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி நவல்பூர் ராணிப்பேட்டை ஆகிய நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பேண்டு வாத்தியங்கள் முழங்க காவல்துறையினர் பேரணியாகச் சென்று இறுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே நிறைவு செய்தனர்