வாலாஜா வட்டம் அனந்த லையில் உள்ள கல்குவாரி இயக்குதல் தொடர்பான கருத்துகேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு வரும் அக்டோபர் மாதம் 21 ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :


ராணிப்பேட்டை மாவட்டம் , வாலாஜா வட்டம் , அனந்தலை கிராமத்தில் சர்வே எண் : 1/4 பகுதி 31 முதல் பகுதி 40 வரை கல்குவாரி இயக்குவது தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் வரும் 25 ம் தேதி சோளிங்கர் சாலை கீழ்புதுப்பேட்டை எம்.எஸ் . கே.திருமண மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிக்கப்பட்டுள்ளது . தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அன்றைய தினத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் வரும் அக்டோபர் மாதம் 21 ம் தேதி மேற்குறிப்பிட்ட அதே இடத்தில் நடைபெறும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .