மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நாள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டு திகழ்ந்தவர் பாரதி. தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.
பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். தனது புரட்சிமிகு பாடல்கள் மூலம் பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு என தனது காலத்திற்கு அப்பாற்பட்ட பாடல்களை இவர் இயற்றியுள்ளார்.

அவர் மறைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டை பாரதியார் நூற்றாண்டு என முதல்-அமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார். இன்று பாரதியாரின் 100-வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “சிறப்புவாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100-வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2020 டிசம்பரில் அவரைப்பற்றி நான் பேசியது இதோ. https://t.co/dAFph8Sfap — Narendra Modi (@narendramodi)