ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த திருமணச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் இவரது இளைய மகன் அஜித்குமார் தனியார் லெதர் கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்

அஜித்குமாருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் கம்பெனியில் இருந்து தொழிலாளர்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அந்த கிராமத்தில் சென்று இறக்கிவிட்டு திரும்பி உள்ளார் 

பிறகு தன்னுடைய வாகனத்தை வாலாஜாவில் உள்ள பார்க்கிங்கில் விட்டுவிட்டு அவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது இந்நிலையில் 
அஜித்குமார் வெகுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் அவரது தந்தை அஜித் குமார் போனுக்கு தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது

அதிர்ச்சியடைந்த அவரது தந்தை காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார் புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துணை ஆய்வாளர் மணிமாறன் பிச்சாண்டி ராஜா உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்