விழுப்புரம், வேலூா், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் அக்டோபா் 6, 9-ஆம் தேதியும், ஏனைய 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் மட்டும் அக்டோபா் 9-ஆம் தேதியும் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக். 6, 9 தேதிகளிலும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 9-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தல் வாக்குப் பதிவு நாளையொட்டி, பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை முதன்மைச் செயலா் பிறப்பித்த உத்தரவில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வாக்குப் பதிவு நடைபெற உள்ள பகுதிகளுக்கு மட்டும் அக்டோபா் 6, 9-ஆம் தேதியும், 28 மாவட்டங்களில் வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் மட்டும் அக்டோபா் 9-ஆம் தேதியும் பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.