சோளிங்கர் அடுத்த சின்னவைலாம் பாடி கிராமம் பச்சையம்மன் கோயில் அருகே உள்ள ஓடையில் அரசு அனுமதியின்றி செங்கல் தயாரிப்பதற்காக டிராக்டரில் மண் திருடி செல்வதாக கொண்டபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் எஸ்ஐ ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் வருவதை பார்த்ததும் மண்அள்ளிக்கொண்டிருந்த நபர் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு சென்றார். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற நபரை தேடி வருகின்றனர்.