நிதியமைச்சர் பிடிஆர் தூத்துக்குடி பயணம்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தூத்துக்குடி செல்வதற்காக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் தமது உடைமைகளுடன் இரண்டு லேப்டாப்களை கொண்டு வந்துள்ளார். இதனை கவனித்த சிஐஎஸ்எஃப் உதவி ஆய்வாளர் ஒருவர் பிடிஆரை தடுத்தி நிறுத்தி, இரண்டு லேப்டாப்களை எடுத்துச் செல்லக்கூடாது எனக் கூறி, அதனை எடுத்துச் செல்ல அனுமதி மறுத்துள்ளார்.


இரண்டு லேப்டாப்களுடன் சென்றதால் சென்னை விமான நிலையத்தில் அவர் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் கோபமடைந்த அமைச்சர் பயணிகள் இரண்டு லேப்டாப்களை எடுத்து செல்லக்கூடாது என்று எந்த கட்டுப்பாடும் இல்லை எனக் கூறி சிஐஎஸ்எஃப் அதிகாரியிடம் கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நான் இந்த மாநிலத்தின் நிதியமைச்சர் என்று பிடிஆர் தெரிவித்துள்ளார். இதனால் அந்த உதவி ஆய்வாளர் கொஞ்சம் ஆடித்தான் போனார்.


சிஐஎஸ்எஃப் எஸ்ஐக்கும், அமைச்சருக்கும் இடையே வாக்குவாதம்.ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்


இதனிடையே விஷயம் உயரதிகாரிகளுக்கு தெரிய வரவே, சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த அவர்கள் நடந்த சம்பவத்துக்காக நிதியமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளனர்.

அமைச்சரை தடுத்து நிறுத்திய சிஐஎஸ்எஃப் எஸ்ஐ,யும் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதனையடுத்து இரண்டு லேப்டாப்களுடன் அமைச்சர் தூத்துக்குடிக்கு பயணித்தார்.