வேலூர் மாநகரில் உள்ள மலைப்பகுதிகளில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நபர்கள் விதைப்பந்துகளை தூவி இயற்கையை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


அதன்படி வேலூர் வள்ளலார் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் மாநகரின் பல்வேறு பகுதிகளில் விதைகளை தூவி உள்ளார்.

இந்த நிலையில், வள்ளலார் அடுத்த செங்கானத்தம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் செப்டம்பர் 30 ஆம் தேதியான இன்று இரண்டாவது கட்டமாக 30 ஆயிரம் விதைப்பந்துகள் வீசும் பணியைத் அவரின் மனைவியுடன் துவக்கினார்.


இந்த பணியானது தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாக சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.