புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கு திடீர் தடை - தேர்தல் நடத்தை விதிகளால் தமிழக அரசு நடவடிக்கை

தேர்தல் நடத்தை விதிகள்
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தேர்தல் முடியும் வரை அச்சடிக்கப்பட்ட புதிய குடும்ப அட்டைகளை வழங்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகளில், அக்., 6, 9ல், இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. 

ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கு திடீர் தடை

இதையடுத்து, மேற்கண்ட மாவட்டங்களில், புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம், விண்ணப்ப பரிசீலனை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என, அதிகாரிகளுக்கு, உணவு துறை தெரிவித்துள்ளது

உணவு துறை அறிவுறுத்தல்

அத்துடன், குடும்ப அட்டையில் பெயர் நீக்கம், திருத்தம் செய்வதையும் தவிர்க்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், அது அறிவுறுத்தியுள்ளது. மேலும், நியாயவிலைக்கடைகளில் அரசியல் பிரமுகர்களின் படங்கள், சுவரொட்டி, விளம்பர பலகைகளை இருந்தால், அவற்றை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.