குறள் : 515

அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று

மு.வ உரை :

(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல் மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.

கலைஞர் உரை :

ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈ.டுபடுத்தக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை :

செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.

Kural 515

Arindhaatrich Cheykirpaarku Allaal Vinaidhaan
Sirandhaanendru Evarpaar Randru

Explanation :

(A king�s) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment.



இன்றைய பஞ்சாங்கம்

20-09-2021, புரட்டாசி 04, திங்கட்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 05.24 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 04.02 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் பின்இரவு 04.02 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பௌர்ணமி விரதம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இன்றைய ராசிப்பலன் - 20.09.2021

மேஷம்

இன்று பிள்ளைகளிடம் இருந்த மனஸ்தாபங்கள் குறையும். செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பொன்பொருள் சேரும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி பெற ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. வீட்டில் பெரியவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்கள் அன்பை பெற முடியும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வேற்று மொழி நபரால் உதவிகள் கிட்டும்.

கடகம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரியங்களை தவிர்க்கவும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிதானம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

சிம்மம்

இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். பணகஷ்டம் குறையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். பொன் பொருள் சேரும். 

கன்னி

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியம் கைகூடும்.

துலாம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை ஏற்படும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களுடன் மனக்கசப்பு உண்டாகலாம். உடனிருப்பவரை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். அயராத உழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதிர்பாராத உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். வீட்டில் சுப காரிய முயற்சிகள் நற்பலனை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும். கொடுத்த கடன் வசூலாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். வருமானம் பெருகும்.

மகரம்

இன்று உங்களுக்கு பயணங்களால் உடல் சோர்வு மனஉளைச்சல் உண்டாகும். வீண் விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். பெரியவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் விலகும்.

கும்பம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,