குறள் : 512

வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை.

மு.வ உரை :

பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து அவற்றால் வளத்தை உண்டாக்கி வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

கலைஞர் உரை :

வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்.

சாலமன் பாப்பையா உரை :

பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.

Kural 512

Vaari Perukki Valampatuththu Utravai
Aaraaivaan Seyka Vinai

Explanation :

Let him do (the king�s) work who can enlarge the sources (of revenue) increase wealth and considerately prevent the accidents (which would destroy it).




இன்றைய பஞ்சாங்கம்

17-09-2021, புரட்டாசி 01, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி காலை 08.08 வரை பின்பு வளர்பிறை துவாதசி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 03.36 வரை பின்பு அவிட்டம். மரணயோகம் பின்இரவு 03.36 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00  

இன்றைய ராசிப்பலன் - 17.09.2021

மேஷம்

இன்று குடும்ப உறவுகளுக்கிடையே ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியை அளிக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் பெருகும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும்.

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமாக இருப்பது நல்லது.

கடகம்

இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப் பலன் கிட்டும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

கன்னி

இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.

துலாம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம். எதிர்பாராத வகையில் கிடைக்கும் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

விருச்சிகம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சேமிப்பு உயரும்.

தனுசு

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். வீண் செலவுகளை குறைக்கவும்.

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

கும்பம்

இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வமின்றி இருப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் உடனிருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களினால் அலைச்சல் அதிகரித்தாலும் பெரிய மனிதர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை அளிக்கும். திடீர் பணவரவு உண்டாகும்.

மீனம்

இன்று தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,