குறள் : 513
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
மு.வ உரை :
அன்பு அறிவு ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல் அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.
கலைஞர் உரை :
அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்.
சாலமன் பாப்பையா உரை :
நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.
Kural 513
Anparivu Thetram Avaavinmai Innaankum
Nankutaiyaan Katte Thelivu
Explanation :
Let the choice (of a king) fall upon him who largely possesses these four things love knowledge a clear mind and freedom from covetousness.
இன்றைய பஞ்சாங்கம்
18-09-2021, புரட்டாசி 02, சனிக்கிழமை, துவாதசி திதி காலை 06.55 வரை பின்பு வளர்பிறை திரியோதசி பின்இரவு 06.00 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 03.21 வரை பின்பு சதயம். சித்தயோகம் பின்இரவு 03.21 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சனிப் பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 18.09.2021
மேஷம்
இன்று உறவினர்கள் மூலம் ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுப பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணவரவு சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 03.25 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது. உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மதியத்திற்கு பிறகு மன அமைதி இருக்கும்.
கடகம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 03.25 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
சிம்மம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். பெற்றோரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணங்களால் வெளிவட்டார நட்பு ஏற்படும்.
கன்னி
இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். வேலையில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீண் செலவுகளை தவிர்ப்பதன் மூலம் பணப்பிரச்சினைகள் குறையும்.
துலாம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். எடுக்கும் புதிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். அனுபவமுள்ளவரின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். எதிலும் நிதானம் தேவை.
விருச்சிகம்
இன்று எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் லாபம் அடையலாம். சிக்கனமாக இருப்பதன் மூலம் பண நெருக்கடிகள் குறையும்.
தனுசு
இன்று உற்றார் உறவினர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். லாபம் பெருகும். பொருளாதாரம் மேலோங்கும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிட்டும்.
மீனம்
இன்று வியாபாரத்தில் எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,