குறள் : 516

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த உணர்ந்து செயல்.

மு.வ உரை :

செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து  செயலின் தன்மையையும் ஆராய்ந்து  தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.

கலைஞர் உரை :

செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை :

முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.

Kural 516

Seyvaanai Naati Vinainaatik Kaalaththotu
Eydha Unarndhu Seyal

Explanation :

Let (a king) act  after having considered the agent (whom he is to employ)  the deed (he desires to do)  and the time which is suitable to it.

இன்றைய பஞ்சாங்கம்

21-09-2021, புரட்டாசி 05, செவ்வாய்க்கிழமை, தேய்பிறை பிரதமை திதி பின்இரவு 05.52 வரை பின்பு தேய்பிறை துதியை. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.06 வரை பின்பு ரேவதி. அமிர்தயோகம் பின்இரவு 05.06 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. மஹாளயபக்ஷம் ஆரம்பம். 

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் - 21.09.2021

மேஷம்

இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை குறையும். நினைத்த காரியம் நிறைவேறும்.

ரிஷபம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும். கடன்கள் குறையும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

கடகம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்களால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

சிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். பொருனாதார ரீதியாக புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

கன்னி

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை அளிக்கும். திடீர் பணவரவு உண்டாகும்.

துலாம்

இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூடும்.

தனுசு

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தினரின் ஆதரவு சிறப்பாக இருக்கும்

மகரம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளி வட்டார நட்பு அறுதலை தரும். கடன்கள் குறையும்.

கும்பம்

இன்று குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும்.

மீனம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,