குறள் : 521
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
மு.வ உரை :
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
கலைஞர் உரை :
ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.
சாலமன் பாப்பையா உரை :
ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.
Kural 521
Patratra Kannum Pazhaimaipaa Raattudhal
Sutraththaar Kanne Ula
Explanation :
Even when (a man�s) property is all gone relatives will act towards him with their accustomed (kindness).
இன்றைய பஞ்சாங்கம்
26-09-2021, புரட்டாசி 10, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி பகல் 01.05 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 02.33 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 26.09.2021
மேஷம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களுடன் மனஸ்தாபங்கள் தோன்றும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்வது நல்லது. பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.
கடகம்
இன்று வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிட்டும். வியாபார ரீதியான பிரச்சினைகள் குறையும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
கன்னி
இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். வருமானம் அதிகரிக்கும்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளி பயணங்களில் கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
தனுசு
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
மகரம்
இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சற்று கவனமுடன் பழகுவது நல்லது. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும்.
கும்பம்
இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப்பிரச்சினைகள் ஏற்படும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
இன்று நீங்கள் எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,