ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஈராளச்சேரி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது

இந்த அங்கன்வாடி மையத்தில் மாவட்ட நிர்வாகத்தால் தற்போது குழாய் இணைப்பு வழங்கப்பட்டன மேலும் அங்கன்வாடி மையத்தில் வெளியே கற்கள் வைக்கப்பட்டிருந்தன அதை முழுவதும் அப்புறப்படுத்தி வருவதை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்

அப்போது மாவட்ட ஆட்சியர் அங்கன்வாடி மையத்தின் உள்ளே இருந்த பெண்மணிகளிடம் அங்கன்வாடி மையத்தில் வரும் குழந்தைகள் பாதுகாப்புடனும் குழந்தைகளிடம் அன்பாக நடக்க வேண்டும் என்றும் அங்கன்வாடி மையத்தில் குறைபாடுகள் அடிப்படை வசதிகள் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனே மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார்