பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் அக்கறைகொண்டு 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று துவங்கப்பட்டு கடந்த 42 ஆண்டுகளாக தாய்சேய் நலன் மற்றும் மேம்பாட்டுக்கு அரும்பணியாற்றி வருவதுதான் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறையின் மூலமாக தேசிய ஊட்டச்சத்து மாதவியா மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சி நிகழ்ச்சியினை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ் டோன் புஷ்பராஜ் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் திட்ட அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை அலுவலர் கோமதி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.