வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த மாச்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் 70 வயதுடைய கஸ்தூரி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வந்த நிலையில் வயிற்று வலி அதிகரித்தால் கத்தியால் வயிற்றில் தானே குத்திக் கொண்டுள்ளார்.
உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து புகாரின் அடிப்படையில் கே வி குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.