ஜே. ஜே. நகர் பகுதி சேர்ந்தவர் குணசேகரன் என்பவரின் இளையமகன் ஊனமுற்றவர் மற்றும் திருமணமாகாத சதீஷ்குமார்-30 இன்று மாலை 3. 30 மணி அளவில் நண்பர்களோடு பாலாறு அணைக்கட்டில் குளிப்பதற்காக சென்றுள்ளார்
பிறகு சதிஷ் குளித்துக் கொண்டிருந்த போது அவர் ஆழமாக இருந்த பகுதி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சதிஷ் நீரில் மாட்டி கொண்டு தண்ணீரோடு தண்ணீராக வேகமாக அடித்துச் செல்லப்பட்டார்
அப்போது அவருடன் வந்த மூன்று நண்பர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சதிஷ்யை பார்த்து பயந்து அங்கிருந்து 3பேரும் ஓட்டம் பிடித்தனர்
பிறகு தகவல் அறிந்து விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் நீரில் இறங்கி நீரில் அடித்துச் செல்லப்பட்ட சதீஷ் சென்ற இளைஞரை தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒன்றரை மணி நேரமாக தேடி வந்துள்ளனர்
இந்த சம்பவம் தொடர்பாக வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
வாலாஜா அருகே பாலார் அணைக்கட்டில் நண்பர்களோடு குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது