வாலாஜா பெல்லியப்பா நகர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் பாமா ( 50 ). இவரது கணவர் சீனிவாசரவிக்குமார். இவர் இறந்து விட்டதால் பாமா தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பாமா தனது வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்தமர்ம ஆசாமிகள், திடீரென பாமாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டனர்.
அதிர்ச்சியடைந்த பாமா கூச்சலிட்டார் . அக்கம்பக் கத்தினர் அங்கு விரைந்து வந்து நகை பறித்தவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் கொள்ளையர்கள் பைக்கில் தப்பிச்சென்றுவிட்டனர்.
இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.