திருவலம் அடுத்த 66 புத்தூர் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் பாண்டித்துரை ( 28 ), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவிமீனா ( 19 ). தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 

பாண்டித்துரை அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் , நேற்று முன்தினம் குடிபோதையில் வந்த பாண்டித்துரை மனைவியிடம் தகராறில் ஈடு பட்டு, அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். 

மேலும் , அங்கிருந்த கத்தியால் கை மற்றும் முதுகு பகுதியில் வெட்டியுள்ளார். இதில், படுகாயமடைந்த மீனாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து மீனா திருவலம் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் , எஸ்ஐ முத்துச்செல்வன் வழக்குப்பதிந்து பாண்டிதுரையை கைது செய்து , காட்பாடி சப்கோர்ட் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.