✍ 1814ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி 19ம் நூற்றாண்டின் சிறந்த கணிதவியலர்களில் ஒருவரான ஜேம்ஸ் சில்வெஸ்டர் லண்டனில் பிறந்தார்.

✈ 1976ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி நாசாவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய் கோளின் வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது.

🏁 1783ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி அமெரிக்கப் புரட்சிப் போர் முடிவுக்கு வந்தது.

பிறந்த நாள் :-

கிரண் தேசாய்

✍ மிக இளம் வயதில் புக்கர் விருது பெற்ற இந்திய பெண் எழுத்தாளர் கிரண் தேசாய் 1971ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் பிறந்தார்.

✍ இவர் 1997-ல் மிரர் வர்க் எனும் தன் முதல் சிறுகதை தொகுப்பை வெளியிட்டார்.

✍ அதன்பின் தன் வாழ்க்கை அனுபவங்களை குறியீடாக வைத்து, 1998-ல் ஹல்லபல்லு இன் தி கோவா ஆர்சர்ட் (Hullabaloo in the Guava Orchard) என்ற நாவலை எழுதினார். இந்நாவல் பெட்டி ட்ராஸ்க் விருதைப் (Betty Trask Award) பெற்றுள்ளது.

✍ அவருடைய அடுத்த நாவலான தி இன்ஹரிடன்ஸ் ஆஃப் லாஸ் (The Inheritance of Loss) பல இலக்கிய திறனாய்வாளர்களின் பாராட்டினைப் பெற்றுள்ளதுடன் 2006ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசினையும் இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. 

✍ உலக அளவில் சிறந்த நூல்களுக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான புக்கர் விருதைப் பெற்ற கிரண் தேசாய் தனது 46வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.