1926ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி நாடுகளின் கூட்டமைப்பில் (League of Nations) ஜெர்மனி சேர்ந்தது. 

1991ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி யுகொஸ்லாவியாவிடம் இருந்து மசடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது. 

1959ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி ஆசிய தொழில்நுட்பக் கழகம், பாங்காக் நகரில் நிறுவப்பட்டது.


முக்கிய தினம் :-

தேசிய கண் தான தினம்
👀 இந்தியாவில் தேசிய கண் தான தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 25-ல் ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 8-ல் முடிவடைகிறது. இக்காலக்கட்டத்தில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும், இந்திய அரசு சார்பில் கடைபிடிக்கப்படுகிறது.

உலக எழுத்தறிவு தினம்
📝 உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக செப்டம்பர் 8ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

📝 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம்; தேதி தெஹ்ரான் நகரில் உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகளாவிய ரீதியில் எழுத்தறிவின்மையால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு நாளாக அனுசரிக்க வேண்டும் என்பது முக்கியத் தீர்மானங்களில் ஒன்றாகும்.

📝 இதன் அடிப்படையில் 1965ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி யுனெஸ்கோவின் 14வது பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில்தான் உலக எழுத்தறிவு தினம் பிரகடனம் செய்யப்பட்டது. 

📝 தனி மனிதர்களுக்கும் பல்வேறு வகுப்பினருக்கும் சமுதாயங்களுக்கும் எழுத்தறிவு எவ்வளவு முதன்மையானது என்பதை எடுத்துரைப்பதே இந்த நாளின் குறிக்கோள் ஆகும்.


நினைவு நாள் :-

குன்னக்குடி வைத்தியநாதன்
🌟 பிரபல வயலின் இசைக்கலைஞரான குன்னக்குடி வைத்தியநாதன் 1935ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் பிறந்தார். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருமே இசைக்கலைஞர்கள்.

🌟 வயலின் கற்றுக்கொண்டு தனது 12வது வயதில் முதல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று தந்தைக்கு பெருமை சேர்த்தார். 1976ஆம் ஆண்டு முதல் வயலின் இசையை கொண்டு கச்சேரி செய்தார்.

🌟 1969ஆம் ஆண்டு 'வா ராஜா வா' என்ற திரைப்படத்துக்கு முதன்முதலாக இசையமைத்தார். இசைப்பேரறிஞர், சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாசிகாமணி, கலைமாமணி, பத்மஸ்ரீ உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

🌟 'வயலின் சக்கரவர்த்தி' என்று போற்றப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன் தனது 73வது வயதில் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-

தேவன்
✍ பிரபல நகைச்சுவை எழுத்தாளருள் ஒருவரான தேவன் எனப்படும் ஆர்.மகாதேவன் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் பிறந்தார்.

✍ இவரது பல படைப்புகள் சின்னத்திரையில் தொடர்களாக வெளிவந்துள்ளது. இவர் சென்னை எழுத்தாளர் சங்கத் தலைவராக 2 முறை பதவி வகித்துள்ளார்.

✍ நம்மைச் சுற்றி வாழும் மனிதர்கள், பொதுவாக மக்கள் வாழும் போக்கு, அன்றைய நாட்டு நிலவரம் ஆகியவை குறித்து மிக நேர்த்தியாகவும், எளிமையான நகைச்சுவையோடும் கூறுவது இவரது படைப்புகளின் சிறப்பம்சம் ஆகும்.

✍ ஆங்கிலக் கதைகள் மட்டுமே படித்தவர்களைக்கூட தன் இயல்பான, நகைச்சுவை கலந்த எழுத்து மூலம் தமிழுக்கு இழுத்தவர் என்று போற்றப்பட்டார். வாசகர்களால் அடுத்த தலைமுறை எழுத்தாளராக பார்க்கப்பட்டவர். தமிழ் எழுத்துலகின் சார்லஸ் டிக்கன்ஸ் என்று அசோகமித்திரன் குறிப்பிட்டுள்ளார்.

✍ கால் நூற்றாண்டு காலத்து கதைகள், நாவல்கள், கட்டுரைகளை எழுதிக் குவித்தார். உலக விஷயங்களை யதார்த்தமான, கதைப்போக்காக மாற்றி உள்ளங்களில் புகுத்திய தேவன் தனது 44-வது வயதில் (1957) மறைந்தார்.