👉 1609ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி ஹென்றி ஹட்சன், ஹட்சன் ஆற்றலை கண்டுபிடித்தார்.

✈ 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

✏ 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி ஹாங்காங்கில், ஹாங்காங் டிஸ்னிலாண்ட் திறக்கப்பட்டது.

💣 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அணுக்கரு தொடர்வினை குறித்த கருத்தை முதன் முறையாக லியோ சிலார்ட் அறிவித்தார்.


முக்கிய தினம் :-


தெற்கு - தெற்கு ஒத்துழைப்பு ஐக்கிய நாடுகள் தினம்

🌐 நிதி, உணவுப் பொருட்கள், வெப்பநிலை மாற்றம் ஆகியவற்றால் உலக அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், வளரும் நாடுகள் மத்தியில் அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்துகின்றன. தெற்கு-தெற்கு வியாபாரம், முதலீடு போன்றவை உயர்ந்துள்ளன. அதே சமயத்தில் வெப்பநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது. டிசம்பர் 19 அன்று கொண்டாடப்பட்ட இத்தினம் ஐ.நா.வால் செப்டம்பர் 12ஆம் தேதிக்கு 2012இல் மாற்றப்பட்டது.


பிறந்த நாள் :-

சி.வை.தாமோதரம்பிள்ளை

✍ தமிழ் பதிப்புத்துறையின் முன்னோடி சி.வை.தாமோதரம்பிள்ளை 1832ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி இலங்கையில் பிறந்தார்.

🏆 பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர்.

🏆 1895ஆம் ஆண்டு இவருக்கு அரசு ராவ் பகதூர் என்ற பட்டத்தை வழங்கியது. 1901ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி சென்னையில் தாமோதரம்பிள்ளை மறைந்தார்.


ஐரீன் ஜோலியட் கியூரி

🏆 செயற்கை கதிரியக்கத்தை உருவாக்கிய பிரெஞ்சு அறிவியலாளரான ஐரீன் ஜோலியட் கியூரி 1897ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி பாரிஸில் பிறந்தார்.

🏆 இவரும் இவரது கணவர் பிரெடரிக் ஜோலியட்-கியூரியும் இணைந்து 1935ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றனர்.

🏆 இதன்மூலம் இன்றுவரை ஒரு குடும்பத்திலிருந்து மிகக்கூடுதலான நோபல் பரிசு வென்ற பெருமை இவர்களது குடும்பத்திற்கு கிடைத்தது.

🏆 ஐரீன் ஜோலியட் கியூரி 1956ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி பாரிஸில் மறைந்தார்.