👉 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

🌏 1917ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ரஷ்யா அதிகாரபூர்வ குடியரசானது.

📇 1886ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது.

💣 1954ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி சோவியத் ஒன்றியம் அணுஆயுத சோதனையை மேற்கொண்டது. 

📄 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி எம்.எஸ்.டாஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது.


முக்கிய தினம் :-

சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம்

🌐 உலகம் முழுவதும் செப்டம்பர் 14ஆம் தேதி அனைத்து நாடுகள் கலாச்சார ஒற்றுமை தினம் (அ) சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம் கொண்டாடப்படுகிறது.

🌐 உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நாட்டினரும், பல்வேறு மொழி கலாச்சாரப் பண்புகளை கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். நமது பாரத நாடும் பழம் பெருமைமிக்க கலாச்சாரப் பண்புகளால் உலக அரங்கில் தலை சிறந்தே விளங்கி வருகிறது. இதை போற்றும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


ஹிந்தி தினம் 

✏ ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ஆம் தேதி ஹிந்தியை பரப்பும் வகையிலும், அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் ஹிந்தி தினம் கொண்டாடப்படுகிறது.

✏ இந்நாளில் ஹிந்தியில் கலை, இலக்கியம், கவிதை போன்ற படைப்புகளை வெளியிடுவோரில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

✏ இந்திய அரசு ஹிந்தியை ஆட்சி மொழியாக, 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அன்று ஏற்றது. மேலும் 1975ஆம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


பிறந்த நாள் :-


வில்லியம் பெண்டிங் பிரபு

♚ பிரிட்டிஷ் இராணுவ வீரர் வில்லியம் பெண்டிங் பிரபு 1774ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.

♚ இவர் ஒரு போர் வீரராக வாழ்க்கையைத் தொடங்கினார். தனது 22வது வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினரானார். 1603ஆம் ஆண்டு சென்னையின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது சர் தாமஸ் மன்றோ செயல்படுத்திய வருவாய் சீர்திருத்தங்களை ஆதரித்தார்.

♚ இந்திய மக்களின் நலனைப் பேணுவதே இந்தியாவை ஆளும் பிரிட்டிஷாரின் தலையாய கடமை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட முதல் தலைமை ஆளுநர் பெண்டிங் என்பதில் ஐயமில்லை.

♚ வில்லியம் பெண்டிங்கின் ஆட்சியில் ஆங்கிலக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு முக்கிய நிகழ்வாகும். வில்லியம் பெண்டிங் பிரபு 1839ஆம் ஆண்டு ஜீன் 17ஆம் தேதி தன்னுடைய 64-வது வயதில் பிரான்சில் மறைந்தார.