💉 1928ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அலெக்சாண்டர் பிளமிங் பென்சிலின் மருந்தை கண்டுபிடித்தார்.
🏫 1981ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
முக்கிய தினம் :-
சர்வதேச மக்களாட்சி தினம்
👥 ஜனநாயகத்தை ஊக்குவிக்கவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் நோக்கில் ஐ.நா. சபை 2007ஆம் ஆண்டு நவம்பர் 8 இல் அனைத்துலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15ஆம் தேதியை அறிவித்தது. அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு என ஐ.நா. கூறுகிறது.
நினைவு நாள் :-
மறைமலை அடிகள்
✍ தனித்தமிழ் இயக்கம் ஆரம்பித்து, தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் 1876ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி நாகப்பட்டினம் அடுத்த காடம்பாடியில் பிறந்தார்.
✍ தமிழ் பற்றால், வேதாச்சலம் என்ற தனது பெயரை மறைமலை என்று மாற்றிக்கொண்டார். இவர் சிறுவயதில் இருந்தே இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.
✍ மேலும் இவர் முருகவேள் என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதினார். 1905-ல் சைவ சித்தாந்த மகா சமாஜத்தை ஆரம்பித்தார். 1911-ல் துறவு மேற்கொண்டார்.
✍ மூடத்தனமான செயல்களை எதிர்த்த தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட மறைமலை அடிகள் 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி 74வது வயதில் (1950) மறைந்தார்.
பிறந்த நாள் :-
எம்.விஸ்வேஸ்வரய்யா
📖 உலகப் புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர் எம்.விஸ்வேஸ்வரய்யா 1860ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி கர்நாடக மாநிலம், சிங்கபல்லபுரா மாவட்டத்தின் முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது முழுப் பெயர், மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா. இவரது நினைவைப் போற்றும் வகையில் இவரது பிறந்த தினம், இந்தியாவின் பொறியாளர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
📖 இவர் வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க நீர்த்தேக்கத்தில் வெள்ளத் தடுப்பு அமைப்புமுறையை (weir water floodgates) உருவாக்கினார். மேலும் ஆசியாவிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்க அணைகளுள் ஒன்றாகக் கருதப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் காவிரியின் குறுக்கே கட்டினார்.
📖 இவர் பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உருவாகக் காரணமாக இருந்தார். ஆங்கில அரசின் சர் பட்டமும், பாரத ரத்னா விருதும் பெற்றுள்ளார். இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்பட்ட இவர் தனது 101-வது வயதில் (1962) மறைந்தார்.
சி.என்.அண்ணாதுரை
✍ தமிழக அரசியல் களத்தில் திராவிட இயக்கத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா சி.என்.அண்ணாதுரை 1909ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
✍ இவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். பிறகு தி.க.வில் இருந்து விலகி 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்.
✍ இவர் மாநிலங்களவை உறுப்பினராக 1962-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று, முதல்வரானார். இவரே மதராஸ் மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றினார்.
✍ அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த சி.என்.அண்ணாதுரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 59-வது வயதில் (1969) மறைந்தார். இவரது இறுதிச் சடங்கில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.