✈ 1968ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி இந்திய உளவுத்துறை நிறுவனமான ரா(RAW) அமைப்பு உருவாக்கப்பட்டது.

🏤 1809ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி லண்டனில் ராயல் ஒப்பேரா மாளிகை திறக்கப்பட்டது.

🌐 1962ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி ருவாண்டா, புருண்டி, ஜமைக்கா ஆகியன ஐ.நா.,வில் இணைந்தன. 

📜 1851ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி நியூயார்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. 


முக்கிய தினம் :-

உலக மூங்கில் தினம்

🌲 உலக மூங்கில் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது.

🌲 மூங்கிலை பச்சைத் தங்கம் என்றும், ஏழைகளின் மரம் என்றும், வனவாசிகளின் வாழ்வாதாரம் என்றும் அழைக்கப்படுகின்றது.

🌲 மற்ற மரங்களைக் காட்டிலும் மூங்கில் மரம் அதிக அளவு கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைட்) எடுத்துக்கொண்டும், அதிக அளவிலான பிராண வாயுவை (ஆக்சிஜன்) வெளியேற்றும் தன்மை கொண்டது. மூங்கில் அதிகமாக வளர்ந்த இடம் குளிர்ச்சியாக இருக்கும்.

🌲 இயற்கை, இந்தியாவிற்கு கொடுத்த கொடை மூங்கில். இதை மத்திய அரசாங்கம் தேசிய மூங்கில் இயக்கம் (National Bamboo Mission) என்ற இயக்கத்தின் மூலம் பிரபலப்படுத்துகிறது.


உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்

💧 உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது.

💧 உலகம் முழுவதும் தண்ணீர் வளங்களைப் பாதுகாப்பதில் பொது விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டை உருவாக்க வேண்டும்.

💧 உள்ளூர் நீர்நிலைகளின் அமிலத்தன்மை, காரத்தன்மை ஆகியவற்றை பரிசோதித்து பார்த்து, நீரின் தரம் குறையாமல் பாதுகாத்திட வேண்டும். மேலும் தண்ணீரை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் Clean Water Foundation இத்தினத்தை 2003 இல் அறிவித்தது.


நினைவு நாள் :-


👉 1783ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி கணித உலகில் இரு எண்களைத் தன் பெயரில் கொண்ட லியோனார்டு ஆய்லர் மறைந்தார்.


பிறந்த நாள் :-


சாமுவேல் ஜான்சன்

✍ ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் 1709ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி பிறந்தார். 

✍ ஆங்கிலேயரான இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும் ஆவார். இவரது அகராதி 1755ஆம் ஆண்டில் வெளியானது.

✍ இவர் 1784ஆம் ஆண்டு தன்னுடய 75-வது வயதில் மறைந்தார்.