🌍 1846ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி நெப்டியூன் கோள் பிரெஞ்சு வானியலாளர் உர்பெயின் ஜோசப் மற்றும் பிரிட்டிஷ் வானியலாளர் ஜோன் அடம்ஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.

⚔ 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி இந்திய-பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது.

🌐 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி மோசிலா ஃபயர் பாக்ஸ் வெப் பிரௌசர் வெளிவந்தது.

📠 1884ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி ஹோர்மன் ஹொலரித், கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்.

நினைவு நாள் :-

✈ 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தமிழ் திரைப்பட நடிகர் பி.யு.சின்னப்பா மறைந்தார்.


பிறந்த நாள் :-

நவநீதம் பிள்ளை
♦ தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நீதிபதியும், முன்னாள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளருமான நவநீதம் பிள்ளை 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் பிறந்தார்.

♦ 1967ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் வழக்கறிஞராக இவர் பணியாற்றத் தொடங்கினார். இவர், தென்னாப்பிரிக்க விடுதலைப் போராளிகளுக்கும், தென்னாப்பிரிக்க விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு பாதுகாவலராக கடமையாற்றினார்.

♦ இவர் 1973இல் நெல்சன் மண்டேலா ரொபன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு வெற்றிகரமாக வாதாடி வெற்றி பெற்றவர்.

♦ இவர் 1992இல் பெண்கள் உரிமைக்காகப் போராடும் சமத்துவம் இப்போது (Equality Now) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். 2003இல் இவருக்கு பெண்கள் உரிமைக்கான முதலாவது குரூபர் பரிசு வழங்கப்பட்டது.


ராம்தாரி சிங் தின்கர்
✍ நவீன இந்திக் கவிதை இலக்கியத்தின் முக்கியத் தூண்களில் ஒருவராகப் போற்றப்பட்ட தேசியக் கவி ராம்தாரி சிங் தின்கர் 1908ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி பிஹார் மாநிலம் பேகுசராய் மாவட்டத்தில் உள்ள சிம்ரியா கிராமத்தில் பிறந்தார்.

✍ இவர் சர்தார் படேல் தலைமையில் பார்டோலியில் 1928-ல் நடந்த விவசாயிகள் சத்தியாகிரகப் போராட்ட வெற்றி குறித்து விஜய் சந்தேஷ் (வெற்றிச் செய்தி) என்ற தலைப்பில் 10 கவிதைகளை எழுதினார்.

✍ இவரது சம்ஸ்க்ருதி கே சார் அத்யாய் என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருதும், ஊர்வசி காவியத்துக்காக பாரதிய ஞானபீட விருதும் கிடைத்தது. இவர் பத்மபூஷண் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

✍ கவிதை, உரைநடை, மொழிகள், இந்தி வளர்ச்சி என 4 துறைகளில் இவர் ஆற்றிய சேவைக்காக 4 ஞானபீட விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று பிரபல கவிஞர் ஹரிவன்ஸ்ராய் பச்சன் புகழ்ந்துள்ளார்.

✍ புரட்சிக் கவிஞர், தேசியக் கவிஞர் என்று போற்றப்பட்ட ராம்தாரி சிங் தின்கர் 66-வது வயதில் (1974) மறைந்தார்.