✍ 1777ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி பிறந்தார்.

🎌 1948ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி ஹோண்டா நிறுவனம் அமைக்கப்பட்டது.

👉 1906ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி பேய்க் கோபுரம் அமெரிக்காவின் முதலாவது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 

📻 1979ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி உலகின் முதலாவது மின்னஞ்சல் சேவையை கம்பியூசேர்வ் ஆரம்பித்தது.

🌆 1789ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி அமெரிக்க ஐகோர்ட் நிறுவப்பட்டது.


பிறந்த நாள் :-


பீகாஜி ருஸ்தம் காமா

⚑ இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையும், பெண் சுதந்திரம் மற்றும் வாக்குரிமைக்காக குரல் கொடுத்தவருமான பீகாஜி ருஸ்தம் காமா 1861ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி மும்பையில்; பிறந்தார்.

⚑ 1907-ல் ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சோசலிஸ்ட் மாநாட்டில் இந்திய சுதந்திரக் கொடி வடிவமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார்.

⚑ இவர் இந்த மாநாட்டில் இந்தியாவில் மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் பிரிட்டிஷிடமிருந்து சுயாட்சி ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தார். பெண்ணுரிமை, பெண்களுக்கு வாக்குரிமை ஆகியவற்றுக்காகப் போராடினார். தனது சொத்துகளில் பெரும் பகுதியை சிறுமிகளுக்கான ஆதரவற்றோர் விடுதி ஒன்றிற்கு எழுதி வைத்தார்.

⚑ இந்தியாவில் பல நகரங்கள், தெருக்கள், பொது அமைப்புகளுக்கு பீகாஜி காமா அல்லது மேடம் காமா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரது உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலையும் வெளியிடப்பட்டுள்ளது. 

⚑ வாழ்நாள் முழுவதும் இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பீகாஜி காமா 1936-ல் 74-வது வயதில் காலமானார்.


ஜார்ஜ் கிளாட்

👉 பிரஞ்சு பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளருமான ஜார்ஜ் கிளாட் 1870ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.

👉 இவர் நியான் விளக்கு மற்றும் பெருங்கடல் வெப்ப ஆற்றல் மாற்றம் (Ocean thermal energy conversion) ஆகியவற்றை கண்டுபிடித்தவர். இவருக்கு 1921ஆம் ஆண்டு Leconte Prize வழங்கப்பட்டது.

👉 ஜார்ஜ் கிளாட் 1960ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி தன்னுடைய 89-வது வயதில் காலமானார்.