☏ 1956ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த முதலாவது தொலைபேசி கம்பித்திட்டம் டிஏடி - 1 நிறுவப்பட்டது.

🎌 1920ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி இந்திய ராக்கெட் ஆராய்ச்சியாளர் சதீஷ் தவான் பிறந்தார். 

👉 1513ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா, பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவர்.

பிறந்த நாள் :-


உடுமலை நாராயணகவி

✍ பழம்பெரும் திரைப்பட பாடல் ஆசிரியரும், தனது எழுச்சிமிக்க பாடல்களால் மக்களிடம் தேசிய உணர்வை ஊட்டியவருமான உடுமலை நாராயணகவி 1899ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த பூவிளைவாடி என்ற கிராமத்தில் பிறந்தார்.

✍ இவர் புரவியாட்டம், சிக்குமேளம், தப்பாட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில் கும்மி போன்ற கிராமியக் கலைகளை ஆர்வத்துடன் கற்றார். விடுதலைப் போராட்டம் தீவிரமாக இருந்த காலக்கட்டம் அது. தேசிய உணர்வுமிக்க பாடல்களை எழுதி, மேடைதோறும் முழங்கச் செய்தார்.

✍ இவர் சமுதாய சீர்திருத்தக் கருத்துகள் நிறைந்த பாடல்களை எழுதினார். இவர் முன்னணி பாடல் ஆசிரியராகத் திகழ்ந்தவர். கவிராயர் என்று அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்பட்டார்.

✍ சங்கீத நாடக சங்கம் 1967-ல் இவரை சிறந்த பாடல் ஆசிரியராகத் தேர்ந்தெடுத்தது. இவர் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தைப் பெற்றவர். பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார்.

✍ கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர், சீர்திருத்தவாதி எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட உடுமலை நாராயணகவி 82-வது வயதில் (1981) மறைந்தார். இவரது நினைவாக 2008-ல் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இவர் பிறந்த ஊரில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.


ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர்

🌀 டென்மார்க் நாட்டு வானியலாளர், ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் 1644ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் என்ற இடத்தில் பிறந்தார்.

🌀 இவர் 1676இல் ஒளியின் வேகத்தை அளவியற் முறைகளால் முதலில் கண்டறிந்தவர். 1708இல் இவர் பாரன்ஃகைட் என்ற வெப்பளவுமானியை உருவாக்கினார்.

🌀 இவர் 1705இல் கோபனாவன் காவல்துறையின் இரண்டாவது தலைவராக நியமிக்கப்பட்டார். ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் 65-வது வயதில் 1710இல் மறைந்தார்.