★ 1792ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி நியூஸ்லாந்தின் முதல் ஆளுநரான வில்லியம் ஹாப்சன் அயர்லாந்திலுள்ள வாட்டர்ஃபோர்ட்டில் பிறந்தார்.

🎼 1890ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி கர்நாடக இசை அறிஞர் பாபநாசம் சிவன் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள போலகம் என்னும் ஊரில் பிறந்தார்.

📖 1908ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி தமிழில் கலைக்களஞ்சியம் தொகுத்த அறிஞர் பத்மபூஷன் ம.ப.பெரியசாமித்தூரன் தமிழ்நாடு, ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.நினைவு நாள் :-


தேசிக விநாயகம் பிள்ளை

👉 தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி கவிஞர்களுள் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1876ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் பிறந்தார்.

👉 இவர் தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1940ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை 'கவிமணி' என்ற பட்டத்தை இவருக்கு வழங்கினார். 

👉 மலரும் மாலையும், ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், அழகம்மை ஆசிரிய விருத்தம், கதர் பிறந்த கதை, குழந்தைச் செல்வம் ஆகியவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

👉 இணையற்ற தமிழ் கவிஞரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1954ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி 78-வது வயதில் (1954) மறைந்தார்.


பிறந்த நாள் :-


மன்மோகன் சிங்

⚑ இந்தியாவின் முன்னாள் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி தற்போது பாகிஸ்தானிலுள்ள கா (புயா) என்னும் ஊரில் பிறந்தார்.

⚑ மத்திய நிதியமைச்சகத்தின் செயலாளர், திட்டக்குழுவின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் என்று பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.

⚑ டாக்டர் மன்மோகன் சிங் பொது வாழ்க்கையில் பல்வேறு விருதுகளையும், பெருமைகளையும் பெற்றுள்ளார். இதில் முக்கியமானது இந்தியக் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண், இந்திய அறிவியல் மாநாட்டில் ஜவஹர்லால் நேரு நூற்றாண்டு பிறந்த நாள் விருது (1995), சிறந்த நிதியமைச்சராக இருந்ததற்காகக் கிடைத்த ஆசியச் செலாவணி விருது, சிறந்த நிதியமைச்சருக்கான யூரோ செலாவணி விருது (1993), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆடம் ஸ்மித் பரிசு (1956) ஆகியவற்றை இவர் பெற்றுள்ளார்.

⚑ தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் டாக்டர் சிங், நாடாளுமன்றத்தின் மேலவையில் (மாநிலங்களவை) உறுப்பினராக 1991ல் இருந்து இருக்கிறார். இவர் 1998 முதல் 2004 வரையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 

⚑ 2004ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், மே மாதம் 22ம் தேதி டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றார். அதன்பின்னர் 22 மே 2009ல் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.