1953ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி இந்திய ஆன்மிகவாதி மாதா அமிர்தானந்தமயி கேரளாவில் பிறந்தார்.

1825ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது.

1905ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தினத்தந்தி நாளிதழை தொடங்கிய சி.பா.ஆதித்தனார் தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி கிராமத்தில் பிறந்தார்.

1905ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி அல்பேர்ட் ஐன்ஸ்டைன் முதல் முறையாக ஆற்றலுக்கான சமன்பாட்டை (E=mc2)அறிமுகப்படுத்தினார்.முக்கிய தினம் :-


உலக சுற்றுலா தினம்

உலக சுற்றுலா நிறுவனத்தின் (WTO) ஆதரவில் செப்டம்பர் 27ஆம் நாளில் 1980ஆம் ஆண்டிலிருந்து உலகெங்கும் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.


நினைவு நாள் :-


எஸ்.ஆர்.ரங்கநாதன்

📚 இந்திய நூலக அறிவியலின் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் 1892ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த வேதாந்தபுரம் கிராமத்தில் பிறந்தார்.

📚 இவர் 1924-ல் சென்னை பல்கலைக்கழக நூலகராக நியமிக்கப்பட்டார். பிறகு லண்டன் சென்று, அங்குள்ள சிறந்த நூலகரான டபிள்யூ.சி.பி.சேயர்ஸிடம், நூல்களை வகைப்படுத்தும் கோட்பாட்டை அறிந்தார்.

📚 நூலகம் அறிவுசார் பிரிவினரை ஒன்றிணைத்து, சென்னை நூலகச் சங்கத்தை நிறுவினார். நூலக நிர்வாகம் உள்ளிட்டவை தொடர்பாக 60-க்கும் மேற்பட்ட நூல்கள், 2,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். 

📚 நூலகத் துறையில் 21 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக செயல்பட்டு பல புரட்சிகளை ஏற்படுத்திய இவர் 1945-ல் ஓய்வுபெற்றார். நூலக அறிவியல் பட்டயப் படிப்பை அறிமுகம் செய்து, தானே கற்பித்தார். இந்திய நூலகச் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். டெல்லி, பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. பத்மஸ்ரீ விருதும் பெற்றார். 

📚 நூலக அறிவியல், ஆவணப்படுத்துதல், தகவல் அறிவியல் துறைகளின் தந்தை என போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதன் 1972ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி 80-வது வயதில் (1972) மறைந்தார். இவரது பெயரில் ஆண்டுதோறும், சிறந்த நூலகர்களுக்கு நல் நூலகர் விருது வழங்கப்படுகிறது.


பிறந்த நாள் :-


நாகேஷ்

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர், நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்த பெருமைக்குரியவருமான நாகேஷ் 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தாராபுரத்தில் பிறந்தார்.

இவர் 1959ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் புகுந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். அது மிகவும் வெற்றிப் படமாக அமைந்தது.

1974ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. நம்மவர் படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது. இவர் 2009ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி மறைந்தார்.