🌐 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.

♖ 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலகச் சாம்பியன் ஆனார்.

👉 1995ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி தமிழகத்தில் திருச்சி மாவட்டத்திலிருந்து கரூர் பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

🌊1882ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகின் முதலாவது நீர்மின் திறன் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

✍ 1901ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி ஹியூபேர்ட் செசில் பூத் (Hubert Cecil Booth) தூசுறிஞ்சிக்கான (vacuum cleaner) காப்புரிமம் பெற்றார்.


முக்கிய தினம் :-
சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்
🌀 சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகின்றது. பைபிளின் மொழிபெயர்ப்பாளரான புனித ஜெரோம், மொழிபெயர்ப்பாளரின் புனிதராகவும் போற்றப்படுகிறார்.

🌀 பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பு 1953ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இந்நாள் அவ்வமைப்பினால் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இவ்வமைப்பு 1991ஆம் ஆண்டில் இந்நாளைப் பன்னாட்டு ரீதியில் கொண்டாட அழைப்பு விடுத்தது. இவ்வகையில் இன்றைய இந்த சர்வதேச மொழிபெயர்ப்பு தினம், கோலாகலமாகக் கொண்டாடத்தக்கதாகவே இருக்கிறது எனலாம்.


பிறந்த நாள் :-

கமலேஷ் சர்மா
🏁 பொதுநலவாய நாடுகளின் 5வது செயலாளர் கமலேஷ் சர்மா 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி பிறந்தார்.

🏁 இதற்கு முன்னதாக லண்டனில் இந்திய உயர் ஆணையராக (நாட்டுப் பேராளர்) பொறுப்பில் இருந்துள்ளார். இவர் 1965லிருந்து 2001 வரை இந்திய வெளிநாட்டுச் சேவையில் அதிகாரியாகப் பணியாற்றி உள்ளார். 

🏁 2002 முதல் 2004 வரை ஐ.நா செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பேராளராக கிழக்குத் திமோரில் பணியாற்றி உள்ளார். 2004இல் இந்தியாவின் உயர் ஆணையராகப் பிரிட்டிஷிற்கு நியமிக்கப்பட்டார்.


ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின்
🏆 பிரெஞ்சு இயற்பியலாளர் ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின் (Jean Baptiste Perrin) 1870ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி பிறந்தார்.

🏆 பொருளிலுள்ள நீர்மங்களில் நுண்ணிய துகள்களின் பிரௌனியன் இயக்கத்தைப் பற்றி ஆய்வு செய்ததோடு இதற்கான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் விளக்கத்தையும் மெய்ப்பித்து, பொருளின் அணுத்தன்மையை உறுதி செய்தார். இதற்காக 1926ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுபெற்றார்.

🏆 1914-18ஆம் ஆண்டுகளில் நடந்த போரின் போது பொறியாளர் படைக்குத் தலைமை அலுவலராகப் பொறுப்பேற்றார். ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின் தன்னுடைய 71வது வயதில் (1942) மறைந்தார்.இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகளை அறிந்து கொள்ள மற்றும் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:- http://bit.ly/2HiTaCA