வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூரிலிருந்து குமார் மகன் பிரபு (32) என்பவர் கொய்யா பழங்களை ஏற்றிக்கொண்டு நேற்று (06. 09. 2021) இரவு 8 மணியளவில் புறப்பட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தார். இரவு 10 மணியளவில்‌ ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீழ்விசாரம் பைபாஸ் சாலை, தனியார் பெட்ரோல் பங்க் அருகே மினி லாரி சென்று கொண்டிருந்தபொழுது மினி லாரியின் பின் பக்கம் உள்ள இடதுபுற சக்கரம் கழன்று ஓடியது. 

இதனால் நிலைதடுமாறிய மினி லாரி பைபாஸ் சாலையின் இடதுபுற பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் பிரபு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மினி லாரி கவிழ்ந்ததில் சாலையில் கொய்யாப் பழங்கள் கொட்டின. இதனை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாரிச் சென்றனர். இதுபற்றி தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் உதவியுடன் மினி லாரியை அப்புறப்படுத்தி விசாரணை செய்து வருகின்றனர்.