அரக்கோணம் ஜவஹர் நகர் 2&வது தெருவை சார்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி லட்சுமி (வயது 60). இவர் நேற்றிரவு வீட்டின் முன்பு வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்திருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வாசலில் உட்கார்ந்து இருந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த 9 சவரன் தங்கச் சங்கிலியை பிடித்து இழுத்தனர். லட்சுமி சங்கிலியை இருக்கமாக பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வருவதைக் கண்ட மர்ம நபர்கள் சங்கிலியை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

தகவல் அறிந்து வந்த அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திகணேஷ், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் மூதாட்டியிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் சங்கிலியை பறிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.