வேலூர் மாவட்டம், அம்பேத்கர் நகரை சேர்ந்த சந்தியா என்ற இளம்பெண் வேலூர் கோட்டை நுழைவுவாயில் அகழியில் குதித்து உயிரிழப்பு.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேலூர் வடக்கு போலீஸார் உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசாருக்கு சந்தியா எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் வேலூர் வடக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.