ராணிப்பேட்டை: ஊரக உள்ளாட்சித் தோ்தலில், வாலாஜா ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி வளாகத்தை ராணிப்பேட்டை மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் சாந்தி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, ஊராட்சி வாா்டு, ஊராட்சி மன்றத் தலைவா், ஒன்றியக் குழு உறுப்பினா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கு பதிவாகும் வாக்குகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகள், பிரிக்கும் அறைகள், வாக்குகள் எண்ணும் அறைகள் உள்ளிட்டவற்றை சாந்தி பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, மையத்தில் செய்யப்பட்டுள்ள முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசி டிவி கேமராக்கள் உள்ளிட்டவற்றையும் அவா் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், திட்ட இயக்குநா் ஜி.லோகநாயகி, கோட்டாட்சியா் பூங்கொடி, ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் சித்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.