ராணிப்பேட்டை அடுத்த வாலாஜா அருகே உள்ள அனந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர் டெல்லி பாபு , கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கோட்டீஸ் வரி ( 30 ). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கட்டிட மேஸ்திரி டெல்லி பாபுவுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. 
இதனால் கணவன் மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற் பட்டு டெல்லி பாபு தனது மனைவி கோட்டீஸ்வரியை ஆபாசமாக பேசுவதும் அடிப்பதுமாக இருந்துவந்துள்ளார். மேலும் தன்னுடைய 2 குழந்தைகளையும் அடித்து உதைத்துள்ளார். மேலும் மூன்று பேரையும் வீட்டிலிருந்து வெளியே தள்ளி கதவை பூட்டி விட்டாராம்.

இதுகுறித்து கோட்டீஸ்வரி நேற்று முன்தினம் இரவு ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். 

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வாசுகி சப்-இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கோட்டீஸ்வரியின் கணவன் டெல்லி பாபு மற்றும் அதற்கு உடந் தையாக இருந்த அவரது மாமனார் ஆகியோரை ராணிப்பேட்டை மகளிர் போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர் .