ராணிப்பேட்டையில் ஆடு சந்தையில் விவசாயிகள், வியாபாரிகள் பெரும் பாலானோர் முகக்கவசம் அணியாமல் திரண்டனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. 
ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். இதில் மளிகை, காய்கறி பொருட்கள் மட்டு மின்றி ஆடுகள், கோழிகள் அதிகளவு விற்பனையாகும். 

ராணிப் பேட்டையில் நடைபெறும் ஆட்டுச்சந்தைக்கு ஆற்காடு , வாலாஜா, சிப்காட், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் ஆடுகளை விற்பனை செய்யவும் வாங்கிச்செல்லவும் வருவார்கள். இதனால் அங்கு லட்சக்கணக்கில் வியாபாரம் நடைபெறுவது வழக்கம். 

அதன்படி வெள்ளிக்கிழமையான நேற்று ராணிப்பேட்டையில் ஆடுசந்தை நடந்தது. இதில் விற்பனைக்காக ஏராளமான ஆடுகள் கொண்டுவரப்பட்டது. சந்தைக்கு விவசாயிகள், வியாபாரிகள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவ்வாறு திரண்ட பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் இருந்தனர்.  இதனால் கொரோனாபரவும் அபாயம் ஏற்பட்டது. 

எனவே, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, நகராட்சிநிர்வாகம் ஆகியவை இணைந்து முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.