இனி மாற்றவே முடியாது என்ற சூழலைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொருவரும் நினைத்தால் கொஞ்சமேனும் இந்த சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்.

மரம் வளர்க்கலாம் : 

முடிந்தவரை வீட்டில் இடம் இருந்தால் செடி, மரம் வளர்க்கலாம். இதனால் சுற்றுச்சூழலுக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்.
இயற்கையையும் சுற்றுச்சூழலையும் அதன் தன்மை மாறாமல் பாதுகாப்பதுதான் நம் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை. ஆனால் தொழில்நுட்பங்களாலும் , 

தண்ணீர் சிக்கனம் : 

தனி நபர் பயன்படுத்தும் தண்ணீர் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். கை கழுவும்போது, குளிக்கும்போது, கழிவறையைப் பயன்படுத்தும்போது என அனைத்து இடங்களிலும் தண்ணீரை கவனமுடன் செலவழித்தல் நல்லது.


மின்சார சிக்கனம் : 

வீட்டில் இருக்கும்போது தேவைக்கு மட்டும் மின்சாரத்தைப் பயன்படுத்துங்கள். ஆளே இல்லாத அறையில் டிவி, லைட் , மின்விசிறி ஓடுவதை சற்று கவனித்து அணைத்தல் நல்லது. இதனால் மின்சாரத்தை பெருமளவு சேமிக்கலாம்.


மாசுக் கட்டுப்பாடு : 

தேவைக்கு மட்டும் வாகனங்களைப் பயன்படுத்துங்கள். நீண்ட தொலைதூரப் பயணம் எனில் கார் , அலுவலகம் போன்ற நகரத்திற்குள் தூரமாக பயணிக்க இருசக்கர வாகனம் என பயன்படுத்துங்கள். அருகில் செல்ல வேண்டுமெனில் சைக்கிள் பயன்படுத்தலாம். நடக்கும் தூரம்தான் எனில் நடந்து செல்வது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நல்லது.


மறுசுழற்சி முறை : 

மறுசுழற்சி செய்யக்கூடிய வகையிலான பொருட்களை வாங்கிப் பயன்படுத்த முடிவு செய்யுங்கள். பிளாஸ்டிக், பாலிதீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்தல் நல்லது. இதனால் மண் வளத்தை பாதுகாக்கலாம். மக்கும் தன்மையற்ற பொருட்கள் குப்பைக்கு செல்லும்போது அவை மண்ணில் புதைந்து மண் வளத்தை பாதிக்கும்.


காகிதச் செலவை குறைத்துக்கொள்ளுங்கள் : 


காகிதம் தயாரிக்க மரங்கள் அழிக்கப்படுகின்றன என்பதை மறவாதீர்கள். எனவே ஒவ்வொரு காகிதத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள். அதேபோல் பிரிட் செய்யவும் தேவையைப் பொருத்து செய்துகொள்ளுங்கள். சிக்கனம் செய்ய காகிதத்தின் இரு பக்கங்களிலும் பிரிட் செய்யுங்கள்.