சீனாவின் சியோமி ஸ்மார்ட்போன்கள் குறிப்பிட்ட சொற்கள் வரும்போது அதை உணர்ந்து ஒற்றறியும் திறனுடன் உள்ளதாக லிதுவேனியப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கப்படும் சியோமி Mi 10T 5G ஸ்மார்ட்போன்கள் திபெத் விடுதலை, தைவான் சுதந்திரம் வாழ்க, ஜனநாயக இயக்கம் ஆகிய சொற்கள் பற்றிய பேச்சு, எழுத்துக்கள் வந்தால் அதை உணர்ந்து ஒற்றறியும் திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக லிதுவேனியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் சைபர் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்த போன்களின் சாப்ட்வேர்களை அணைத்து வைத்திருந்தாலும் கூடத் தொலைவில் இருந்து அவற்றை ஆன் செய்ய முடியும் வகையில் உள்ளதாகவும், பயனர் தரவுகளை என்கிரிப்ட் செய்து சிங்கப்பூரில் உள்ள ஒரு சர்வருக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் லிதுவேனியாவின் சைபர் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இதனால் அந்த வகை போன்களை வாங்குவதையும், ஏற்கெனவே உள்ளவற்றைப் பயன்படுத்துவதையும் தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது.