இராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த காட்டுப்பாக்கம் கிராமம் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் சின்னப்பையன் விவசாயி அவரது மகள் ரம்யா (19) அவர் தனது வீட்டில் கடந்த 13 தேதியன்று காலை 6. 30 வாலாஜாப்பேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார் 

பின்னர் ரம்யா மாலை 5 மணி ஆகியும் வீடு திரும்பாததால் இதனால் பயந்து போன பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தீவிரவாத ரம்யாவை தேடிவந்துள்ளனர் 

இந்நிலையில் சின்னப்பையன் அதே ஊரைச்சேர்ந்த சுப்பிரமணியின் மகன் பரத் என்பவர் ரம்யாவை கடத்திச் சென்றிருக்கலாம் என ரம்யாவின் பெற்றோர்கள் சந்தேகமடைந்து பாணாவரம் போலீஸில் இது குறித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர் அதன் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து காணமால் போன இளம்பெண் ரம்யாவை தேடிவருகின்றனர்