ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் படவேடு கோவில் தெரு ஆயல் கிராமத்தை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் இவரது மகன் சூர்யா இவர் இன்று சுமார் ஒன்பது முப்பது மணி அளவில் பானவரம் சோளிங்கர் செல்லும் பஸ் பேருந்து நிலையத்தில் சூர்யா தனது கையில் கட்டையை வைத்துக் கொண்டு அங்கு இருந்தவர்களிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் பேருந்து நிலையம் அருகே அங்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சிவா நீங்கள் எப்படி பெட்ரோல் போட்டுக்கொண்டு ஒட்டுகிறார்கள்.

எனவே எனது வாகனத்துக்கு பெட்ரோல் விலை உயர்ந்ததால் என்னால் பெட்ரோல் போட முடியவில்லை ஆகவே நீங்கள் யாரும் பெட்ரோல் போட்டு வண்டி ஓட்டக் கூடாது என்று பேருந்தில் கட்டைகளை காட்டி பொதுமக்களை மிரட்டி வந்துள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த பாணவரம் காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் போக்குவரத்து இடையூறு செய்த அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.